மாருதி சுசூக்கி இந்தியா நிறுவனம் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல் விலையை 2 சதவீதம் வரை விலையை ஜனவரி 1 முதல் உயர்த்த உள்ளது.
மாருதி சுசூக்கி இந்தியா
வருகின்ற ஜனவரி 1, 2018 முதல் டாடா உட்பட பெரும்பாலான மோட்டார் வாகன நிறுவனங்கள் உற்பத்தி செலவுகளை அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு விலை உயர்வினை அறிவிக்க துவங்கியுள்ளது.
இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி இந்தியா விற்பனையில் உள்ள ரூ.2.45 விலை கொண்ட ஆல்டோ கார் முதல் அதிகபட்சமாக ரூ. 11.29 லட்சம் விலை பெற்றுள்ள மாருதி எஸ்- கிராஸ் வரை அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ள விலை உயர்வு மாடல்கள் மற்றும் எரிபொருள் வகையாக வேறுபட்டாலும் அதிகபட்சமாக இரண்டு சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மாருதியின் 2 % விலை உயர்வு ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வரவுள்ளது.