இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஸ்விப்ட் காரில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக கிடைத்து வரும் நிலையில் , இனி மாருதி ஸ்விப்ட் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மாற்றியமைக்க மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
6 கியர்களில் மாருதி ஸ்விப்ட்
இந்தியாவின் மிக பிரபலமான மற்றும் முன்னணி மாடலாக விளங்கி வருகின்ற மாருதி ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார் 5 கியர்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் என இரண்டு விதமான கியர்பாக்ஸ்களில் கிடைத்து வரும் நிலையில், மாருதி இந்த காரை தொடர்நது கியர்பாக்ஸ் வகையில் மேம்படுத்த முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 6 வேக மேனுவல் கியர்களை கொண்ட மாடலை MF30 என்ற குறியீடு பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த கியர்பாக்ஸ் மாருதி நிறுவனத்தின் மற்ற மாடல்களான சியாஸ், பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவற்றிலும் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாக உள்ள இந்த வேரியன்ட், அறிமுக வருடத்தில் 50,000 அலகுகள் என்ற எண்ணிக்கையில் 6 கியர்களை கொண்ட வேரியன்ட் விற்பனை செய்ய உள்ள நிலையில், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டிற்குள் 4 லட்சம் கியர்பாக்ஸ்களை விற்பனை செய்ய இலக்கை மாருதி திட்டமிட்டுள்ளது.
இந்த கியர்பாக்ஸ் மிக சிறப்பான வகையில் செயல்திறனை வழங்கவல்லதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.