16 ஆண்டுகள் 11 மாதங்களை எடுத்துக் கொண்டு 30 லட்சம் உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் காரின் அறிமுகம் முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தற்பொழுது 4வது தலைமுறை டிசையர் விற்பனையில் உள்ளது.
2008 ஆம் ஆண்டில் டிசைரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை வெளியானது. 4வது தலைமுறை டிசையர் நவம்பர் 2024ல் ஸ்விஃப்ட் மாடலை சார்ந்திருக்காத வகையில் பல்வேறு வசதிகளுடன் சன்ரூஃப் கொண்டதாக வெளியானது.
புதிய சாதனை குறித்து மாருதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஹிசாஷி டேகுச்சி, “டிசையரின் 3 மில்லியன் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்த எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர் நம்பிக்கைக்கு நாங்கள் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து, தொடர்ந்து 16 ஆண்டுகளாக செடான் பிரிவில் முன்னணியில் இருக்கிறோம்.
எனது மனமார்ந்த நன்றியை எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் குழு என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.