Auto Industry 30 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி டிசையர்..! Last updated: 31,December 2024 8:02 am IST Automobile Tamilan Team Share மாருதி சுசூகி டிசையர்16 ஆண்டுகள் 11 மாதங்களை எடுத்துக் கொண்டு 30 லட்சம் உற்பத்தி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் காரின் அறிமுகம் முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தற்பொழுது 4வது தலைமுறை டிசையர் விற்பனையில் உள்ளது.2008 ஆம் ஆண்டில் டிசைரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை வெளியானது. 4வது தலைமுறை டிசையர் நவம்பர் 2024ல் ஸ்விஃப்ட் மாடலை சார்ந்திருக்காத வகையில் பல்வேறு வசதிகளுடன் சன்ரூஃப் கொண்டதாக வெளியானது.டிசையரை பற்றி சில முக்கிய சிறப்புகள் கடந்த 16 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான செடான் ரக மாடலாக 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பேக்ட் பிரிவில் விளங்குகின்றது. மாருதியின் ஆல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் வரிசையில் 4வது மாடலாக 30 லட்சம் உற்பத்தியை கடந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் லத்தீன் & மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு என சுமார் 48 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி துவங்கப்பட்டு தற்பொழுது வரை 2.80 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் 10 இலட்சம் இலக்கை எட்ட 2008-2015 வரை என 7 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்த 10 இலட்சத்தை 2019 ஆம் ஆண்டிலும், அடுத்த 10 லட்சத்தை 2024 ஆம் ஆண்டில் கடந்துள்ளது. மாருதி சுசூகி டிசையர் 30 லட்சம் உற்பத்தி சாதனைபுதிய சாதனை குறித்து மாருதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஹிசாஷி டேகுச்சி, “டிசையரின் 3 மில்லியன் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்த எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர் நம்பிக்கைக்கு நாங்கள் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.எங்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து, தொடர்ந்து 16 ஆண்டுகளாக செடான் பிரிவில் முன்னணியில் இருக்கிறோம்.எனது மனமார்ந்த நன்றியை எங்களது வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் குழு என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். TAGGED:Maruti Suzuki Dzire Share This Article Facebook Previous Article வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்த ஃபோக்ஸ்வேகன் போலோ.! Next Article ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 அறிமுகம் எப்பொழுது..?