மாருதி சுசுகி கார் தயாரிப்பாளர் கடந்த 37 ஆண்டுகளில் 2 கோடி கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. முதல் 1 கோடி வாடிக்கையாளர்களை 29 ஆண்டுகளில் பெற்ற மாருதி அடுத்த 8 ஆண்டுகளில் மீண்டும் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனை செய்த மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகின்றது.
1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் கார் மாடலாக மாருதி 800 உற்பத்தி செய்யப்பட்டது. 1994-1995 ஆம் ஆண்டில் முதல் முறையாக 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த மாருதி அதன் பிறகு 2005-2006 ஆம் நிதியாண்டில் 50 லட்சம் வாகனங்களையும், 2011-12 ஆம் நிதி வருடத்தில் முதன்முறையாக 1 கோடி விற்பனை இலக்கை கடந்து சாதனை படைத்தது.
மிக குறுகிய காலத்தில் அதாவது முதல் 1 கோடி இலக்கை அடைய 29 ஆண்டுகளை எடுத்துக் கொண்ட மாருதி சுசுகி அடுத்த 8 ஆண்டுகளில் அடுத்த 1 கோடி வாடிக்கையாளர்களை இணைத்து 2 கோடி இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக தொடர்ந்து பங்களிப்பை அதிகரித்து வருகின்ற மாருதி நிறுவனம் பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடர்ந்து அடுத்து மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.