இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுஸூகி கார் நிறுவனம், தனது மாடல்களின் விலையை அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 1, 2019 முதல் பெரும்பாலான மோட்டார் தயாரிப்பாளர்கள் கார் விலை உயர்த்தியுள்ளது.
மாருதி சுஸூகி கார் விலை
கடந்த 2018 ஆம் ஆண்டில் சுமார் 17 லட்சத்துக்கும் கூடுதலான கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது.
கடந்த ஜனவரி 1, 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா, ஹூண்டாய், ஹோண்டா, நிசான், வோக்ஸ்வேகன் மற்றும் பிஎம்டபிள்யூ என பல்வேறு நிறுவனங்கள் விலை உயர்த்திருந்த நிலையில், ஜனவரி 10ந் தேதி முதல் தனது அனைத்து மாடல்களின் விலையை ரூ.10,000 வரை மாருதி உயர்த்தியுள்ளது.
மாறிவரும் சந்தையின் சூழல், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு, நிலையற்ற அன்னிய செலவானி மாற்றம் போன்ற காரணங்களால் விலை உயர்வினை தவிர்க்க இயலவில்லை.
வருகின்ற ஜனவரி 23ந் தேதி மாருதி சுசூகி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட புதிய மாருதி வேகன்ஆர் கார் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த கார் விலை ரூ.4.50 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.