இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி கார்களின் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்து வருகின்றது.
ஏற்கனவே, ஆடி இந்தியா, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் மஹிந்திராவும் இணைந்துள்ளது.
Mahindra Price hike
மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஜனவரியில் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விலை உயர்வு மற்றும் சரியான விவரங்கள் சில வாரங்களில் அறிவிக்கப்படலாம்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தயாரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு விலை உயர்த்தப்படுகின்றது.