மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் நாசிக் ஆலை 1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது வரை 25,00,000 வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. 25 லட்சமாவது காராக ஸ்கார்ப்பியோ எஸ்யூவி தயாரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் நாசிக் தொழிற்சாலை 1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது மொத்தம் 147 ஏக்கர் பரப்பளவு மற்றும் 2,10,000 வாகனங்களின் உற்பத்தி திறன் கொண்டதாக விரிவடைந்துள்ளது. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் வாகனம் FJ மினி பஸ் ஆகும். ஆலை துவங்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு நாளைக்கு எட்டு வாகனங்களை உற்பத்தி செய்தது.
இன்று, 700 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் தயாரிக்கப்பட்டு 34 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலை தற்போது ஸ்கார்ப்பியோ, மராஸ்ஸோ, எக்ஸ்யூவி 300, பொலெரோ, இ-வெரிட்டோ, மற்றும் தார் போன்ற மஹிந்திரா உற்பத்தி செய்கின்றது.
இந்த நிகழ்வில் பேசிய மஹிந்திரா & மஹிந்திராவின் ஆட்டோமொடிவ் பிரிவின் உற்பத்தித் தலைவர் விஜய் கல்ரா கூறுகையில், “இந்த சாதனை எங்கள் வாகன பயணத்தில் எங்களுக்கு ஒரு முக்கியமான தருணம் மற்றும் நாசிக் ஆலையின் ஒவ்வொரு ஊழியரும் மேற்கொண்ட அயராத முயற்சிக்கு சான்றாகும். இந்த சாதனை வரவிருக்கும் காலங்களில் எங்கள் நாசிக் ஆலைக்கு இன்னும் பல பாராட்டுக்களுக்கு ஒரு படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.