இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனம் புதிதாக பயன்படுத்திய மின்சார கார்களுக்கு முதல் பிரத்யேக டீலரை பெங்களூருவில் திறத்துள்ளது.
மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ்
- இந்தியாவின் முன்னணி பழைய கார் விற்பனை மையமாக மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் விளங்குகின்றது.
- கடந்த 5 வருடங்களில் 50 சதவித வளர்ச்சி அடைந்து 1200க்கு மேற்பட்ட டீலர்களை நாடு முழுவதும் பெற்றுள்ளது.
- முதல் பயன்படுத்திய மின்சார கார்களுக்கான ஷோரூம் பெங்களூரு HSR லேஅவுட் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பயன்படுத்திய கார் விற்பனை நிலையமாக செயல்படுகின்ற மஹிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனம் மிகச் சிறப்பான வளர்ச்சியை நாடு முழுவதும் பழைய கார் விற்பனையில் பதிவுசெய்து வருகின்றது.
பல்வேறு பிராண்டுகளில் உள்ள அனைத்து பயன்படுத்திய கார்களையும் தர சான்றிதழுடன் வாங்க ஏற்ற இடமாக உள்ள ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பெங்களூரு HSR லேஅவுட்டில் நாட்டின் முதலாவது பயன்படுத்தப்பட்ட மின்சார கார்களுக்கு என பிரத்யேகமான டீலரை திறந்துள்ளது.
இந்த மையத்தில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்கான சேவைகள் மற்றும் சர்வீஸ் சார்ந்த அம்சங்களை வழங்குவதற்காக ELEKTRICFIRST மற்றும் ELEKTRICFIRST+ இருவிதமான வாரண்டி திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக்ஃபர்ஸ்ட் திட்டத்தில் மின்சார கார்களுக்கு என பிரத்யேகமான வசதிகளை வாகனம் சார்ந்த பேட்டரி , மின்சார கார்களுக்கான உதிரிபாகங்கள், டிரைவ்ட்ரெயின் போன்ற வசதிகளை வழங்க உள்ளது.
2007 முதல் செயல்பட்டு வருகின்ற மகேந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் லட்சகணக்கான பல பிராண்டுகளின் பழைய கார்களை நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளது.