Categories: Auto Industry

2025ல் கியா சிரோஸ், கேரன்ஸ் எலெக்ட்ரிக் அறிமுகமாகிறது..!

kia syros car

இந்தியாவில் கியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கேரன்ஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எம்பிவி மற்றொன்று சமீபத்தில் வெளியான சிரோஸ் எஸ்யூவி காரின் அடிப்படையிலான மாடலாகும்.

கேரன்ஸ் எலெக்ட்ரிக் எம்பிவி வருகை குறித்து ஏற்கனவே கியா நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்த நிலையில் தற்போது கூடுதலாக சிரோஸ் எலெக்ட்ரிக் மாடலாக வருவது உறுதியாக இருக்கின்றது. கியா மற்றும் ஹூண்டாய் என இரு நிறுவனங்களும் பேட்டரி செல்களை எக்ஸைட் எனர்ஜியில் இருந்து பெற உள்ளது.

சிரோஸ் எலெக்ட்ரிக்

சர்வதேச அளவில் ஹூண்டாய் குழுமத்தின் K1 platform மூலம் தயாரிக்கப்பட்ட இன்ஸ்டெர் எஸ்யூவி மாடலும் சிரோஸ் மாடலும் ஒரே பிளாட்ஃபாரம் ஆகும். ஏற்கனவே, இன்ஸ்டெர் இவி விற்பனையில் உள்ளதால் அதன் அடிப்படையிலான நுட்பங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது. எவ்விதமான பேட்டரி ரேஞ்ச் மற்றும் நுட்பம் தொடர்பான விபரங்களையும் கியா உறுதிப்படுத்தவில்லை.

இந்த மாடல் அனேகமாக 42kWh மற்றும் 49kWh என இரு விதமான பேட்டரியை பெற்று 300 முதல் 350 கிமீ வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தலாம், சிரோஸ் எலெக்ட்ரிக் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படலாம்.

கேரன்ஸ் எலெக்ட்ரிக்

கியா நிறுவனத்தின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள முதல் எலெக்ட்ரிக் எம்பவி மாடலாக கேரன்ஸ் காரில் பேட்டரி மற்றும் நுட்பம் தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த மாடலின் ரேஞ்ச் அனேகமாக 400 முதல் 500 கிமீ வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேரன்ஸ் எலெக்ட்ரிக் அறிமுகம் 2025ல் மேற்கொள்ளப்பட்டு 2026யின் துவக்க மாதங்களில் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

Share
Published by
BHP Raja