ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலின் 1200 கார்கள் ஏர்பேக் பிரச்சனையின் காரணமாக திரும்ப அழைக்கப்பட உள்ளது.
காம்பஸ் எஸ்யூவி திரும்ப அழைப்பு
அமெரிக்கா, மெக்சிக்கோ, மற்றும் கனடா உட்பட இந்தியா போன்ற நாடுகளில் சுமார் 8500-க்கு அதிகமான காம்பஸ் எஸ்யூவிகளில் பயணிகளுக்கான ஏர்பேக் மாடுல்யூவில் உள்ள ஸ்க்ரூவ் பிரச்சனையின் காரணமாக திரும்ப அழைக்க உள்ளது.
விற்பனை செயப்பட்டுள்ள காம்பஸ் எஸ்யூவி கார்களில் 1 சதவீதக்கு குறைவான மாடல்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 5 முதல் நவம்பர் 19,2017 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
இந்தியளவில் சுமார் 1200க்கு அதிகமான கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட குறைந்தபட்ச காலத்தில் 7561 காம்பஸ் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகார்வப்பூர்வமான டீலர்கள் வாயிலாக திரும்ப அழைக்கப்பட உள்ளது.