ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ஜீப் நிறுவனம் , இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி மற்றும் 3 இருக்கை வரிசை பெற்ற நடுத்தர எஸ்யூவி ரக மாடல் உட்பட 4 எலக்ட்ரிக் கார்கள் மற்றும் 10 பிளக் இன் ஹைபிரிட் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஜீப் இந்தியா
அடுத்த 5 ஆண்டுகளில் ஜீப் நிறுவனம் தயாரிக்க உள்ள மாடல்கள் இந்தியா சந்தை உட்பட ஐரோப்பா, அமெரிக்கா சந்தைகளில் விற்பனை செய்யப்பட உள்ள மாடல்கள் குறிதநான விபரங்களை வெளியிட்டுள்ளது.
நீண்ட ஜீப் எஸ்யூவி ரக பாரம்பரியத்தை தொடர்ந்து அடிப்படையாக கொண்ட உயர்ரக எஸ்யூவி, எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் பிளக் இன் ஹைபிரிட் மாடல்களை திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற ஈக்கோஸ்போர்ட, விட்டாரா பிரெஸ்ஸா, நெக்ஸான் மாடல்களுக்கு எதிராக ஜீப் ரெனிகேட் எஸ்யூவி மாடலுக்கு கீழாக புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
இதை தவிர இந்நிறுவனம் மூன்று வரிசை இருக்கை கொண்ட நடுத்தர ரக எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவை ஃபியட் கிறைஸலர் நிறுவனம் ஏற்றுமதி மையமாக மாற்றியமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது.