ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஜாகுவார் பிராண்டில் வரவுள்ள இனி புதிய மாடல்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் மாடல்களாக வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் புதிதாக லோகோ உருவாக்கப்பட்டு முற்றிலும் மாறுபட்ட அமைப்பினை கொண்டிருக்கின்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எழுத்துருவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லோகோ ஆனது J மற்றும் இறுதி r என இரண்டும் ஒரே மாதிரியாக தலைகீழாக இருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டு மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டிருக்கின்றது.
ஜாகுவார் கார்களில் உள்ள புகழ்பெற்ற தாவும் ஜாகுவார் பூனை சின்னம் அதாவது ‘லீப்பர்’ தற்பொழுது முன்பை போல ஆக்ரோஷமாக காட்சிக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனாலும் ஆக்ரோஷமாக விளங்கும் வகையில் மிக சிறப்பான வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய லோகோ குறித்து ஜாகுவார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜாகுவார் அசல் தன்மையில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. எங்கள் நிறுவனர் சர் வில்லியம் லியோன்ஸ், ‘ஒரு ஜாகுவார் ஒன்றின் பிரதியாக இல்லாமல் இருக்க வேண்டும்’ என்று விரும்பினார்.
இன்று ஜாகுவார் பற்றிய நமது பார்வை இந்தத் தத்துவத்தின் மூலம் அறியப்படுகிறது. புதிய ஜாகுவார் என்பது எக்ஸ்பரண்ட் நவீனத்தை சுற்றி உருவாக்கப்பட்ட ஒரு பிராண்ட் ஆகும். இது ஒவ்வொரு தொடு புள்ளியிலும் கற்பனை, தைரியம் மற்றும் கலைத்தன்மை கொண்டது. இது தனித்துவமானது மற்றும் அச்சமற்றது.
இது ஜாகுவாரின் சாராம்சத்தை மீட்டெடுக்கும் ஒரு மறுபரிசீலனையாகும், ஒரு காலத்தில் அது மிகவும் விரும்பப்பட்ட மதிப்புகளுக்கு அதைத் திருப்பித் தருகிறது, ஆனால் சமகால பார்வையாளர்களுக்கு இது பொருத்தமானதாக அமைகிறது. எதிர்காலத்திற்காக ஜாகுவார் உருவாக்கி வருகிறோம், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஜாகுவார் சமூகத்தின் வாழ்க்கையை வளப்படுத்தும் பிராண்டாக அதன் நிலையை மீட்டெடுக்கிறோம்.
பேராசிரியர் Gerry McGovern OBE தலைமை கிரியேட்டிவ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் புதிய பிராண்ட் லோகோ டிசம்பர் 2 அன்று மியாமி கலை வாரத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஜாகுவார் எலெகட்ரிக் மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.