வரும் ஏப்ரல் 1 முதல் இசுசூ மோட்டார்ஸ் நிறுவன பிக்கப் டிரக்குகளான D-Max ரெகுலர் கேப் மற்றும் D-Max S-Cab என இரண்டின் விலையும் 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலையே உயர்வுக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை முதல் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, நிசான் டட்சன் , கவாஸாகி உள்ளிட்ட மாடல்களின் விலை கனிசமாக உயர்த்தப்படுகின்றது. பெரும்பாலான நிறுவனங்கள் விலை உயர்வுக்கு உற்பத்தி செலவை காரணமாக குறிப்பிட்டுள்ளன.
இசுசூ பிக்கப் டிரக் விலை அதிகரிப்பு
இசுசூ நிறுவனம் இந்திய சந்தையில் பிக்கப் டிரக் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் இசுசூ விற்பனை செய்து வருகின்ற D-Max ரெகுலர் கேப் மற்றும் D-Max S-Cab இரு மாடல்கள் மட்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு மாடலான D-Max V-Cross விலை அதிகரிக்கப்படவில்லை.
இதுகுறித்து இசுசூ வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து உற்பத்தி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பினை ஈடுகட்டவே விலையை உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் வாசிங்க : மஹிந்திரா வாகனங்கள் விலை 73,000 வரை அதிகரிப்பு