இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில் மாருதியின் பங்கு தொடர்ந்து சீரான வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த பிப்ரவரி 2019 மாதந்திர விற்பனையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் முதல் 10 இடங்களில் 6 இடங்களை பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி 2019 மாதந்திர விற்பனையில் மாருதி சுசூகியின் முதல் 10 இடங்களில் 6 இடங்களை வரிசையாக இடம்பிடித்துள்ளது. ஹூண்டாயின் மூன்று மாடல்கள் மற்றும் டாடாவின் டியாகோ ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளது.
மாருதியின் டாப் 6 கார்கள்
முதலிடத்தில் பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி ஆல்டோ கார், 24,751 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய வருடத்தின் இதே மாதத்தில் 19,760 யூனிட்டுகளை விற்றிருந்தது. பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடல்களான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா என இரு மாடல்களும் பட்டியிலில் உள்ளன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய மாடல்கள் முறையே 7 மற்றும் 9வது இடங்களிலும் டாடாவின் டியாகோ கார் 10வது இடத்திலும் உள்ளது. முழுமையான பட்டியலை கீழே உள்ள அட்டவனையில் காணலாம்.
விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2019
வ.எண் | தயாரிப்பாளர்/மாடல் | பிப்ரவரி 2019 |
1. | மாருதி சுசூகி ஆல்டோ | 24,751 |
2. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 18,224 |
3. | மாருதி சுசூகி பலேனோ | 17,944 |
4. | மாருதி சுசூகி டிசையர் | 15,915 |
5, | மாருதி சுசூகி வேகன்ஆர் | 15,661 |
6. | மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா | 11,613 |
7. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 11,547 |
8 | ஹூண்டாய் க்ரெட்டா | 10,206 |
9. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 9,065 |
10. | டாடா டியாகோ | 8,286 |