ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த 2018-2019 நிதி ஆண்டில் மொத்தமாக 707,348 வாகனங்ளை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டு 2017-2018 உடன் ஒப்பீடுகையில் 690,184 யூனிட்டுகள் விற்பனை செய்து 2.5 சதவீத வளர்ச்சியாகும.
உள்நாட்டில் ஹூண்டாய் கார் விற்பனை 1.7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக 2017-2018 ஆம் நிதி ஆண்டில் 536,241 யூனிட்டாக இருந்த நிலையில், நடந்து முடிந்த FY2018-19 நிதி ஆண்டில் 545,243 வாகனங்களை விற்றுள்ளது.
ஹூண்டாய் கார் விற்பனை நிலவரம் – FY2018-19
இந்தியாவின் முதன்மையான கார் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் ஹூண்டாயின் செயற்பாடு, கடந்த மார்ச் 2019 மாதந்திர விற்பனையில் 7.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த மார்ச் 2019-ல் 44,350 யூனிட்டுகளை விற்றுள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 48,009 வாகனங்கள் விற்றிருந்தது குறிப்பிடதக்கதாகும்.
தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளாரக இந்நிறுவனம், ஏற்றுமதி சந்தையில் தொடர்ந்து முதலிடத்தை கொண்டுள்ளது. விற்பனை நிவரம் குறித்து கருத்து கூறிய இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் விகாஸ் ஜெயின், நாங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எங்களுடைய தயாரிப்புகள் சிறந்த தரத்துடன் மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்குவதனை கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிங்க — பெஸ்ட் டெக் காராக களமிறங்கும் ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி சிறப்புகள்