இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் நிறுவனம், 2019 ஜனவரி முதல் தனது மாடல்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்துவதாக இந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் , ஜனவரி 1, 2019 முதல் தங்களது வாகனங்களின் விலையை கனிசமாக உயர்த்துவதாக அறிவித்திருந்த நிலையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனமும் ரூ.30000 வரை உயர்த்த உள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து ஹூண்டாய் அறிக்கையில், அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, அன்னிய செலவானி மதிப்பு உயர்வு போன்றவற்றை முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த ஹூண்டாய் சான்ட்ரோ கார் முதல் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, எக்ஸ்சென்ட், வெர்னா, எலன்ட்ரா, கிரெட்டா மற்றும் ஹூண்டாய் டூஸான் ஆகிய மாடல்களும் ரூ.30000 வரை விலை உயருகின்றது.