இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், மே 2018 மாதந்திர விற்பனையில் முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 7 சதவீத வளர்ச்சி பெற்று 45,008 யூனிட்டுகள் உள்நாட்டிலும், ஏற்றுமதி சந்தைக்கு சுமார் 11,008 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் பயணிகள் கார் சந்தையில் இரண்டாவது இடத்தை ஹூண்டாய் பெற்றுள்ளது.
மாருதியை தொடர்ந்து பயணிகள் கார் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சியை கண்டு வரும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம், சமீபத்தில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹூண்டாய் எலீட் ஐ20 சிவிடி கியர்பாக்ஸ் மாடலை வெளியிட்டிருந்தது.
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் சுமார் 7 சதவீத வளர்ச்சி பெற்று விளங்கும், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 45,008 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 , எலீட் ஐ20 மற்றும் க்ரெட்டா ஆகிய மாடல்கள் சந்தையில் அமோகமான ஆதரவை கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஹூண்டா வெர்னா,ஏற்றுமதி சந்தை உட்பட இந்தியாவிலும் அபரிதமான வரவேற்பினை பெற்று விளங்குவதாக ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.