ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டின் $1 ட்ரில்லியன் இலக்கை எட்டுவதற்கு முக்கிய பங்களிப்பாளராக விளங்கும் வகையில் கூடுதலாக ரூ.6,180 கோடி முதலீட்டை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த கூடுதல் முதலீடு திட்டத்தில் ரூ.180 கோடி மதிப்பில் ஹைட்ரஜன் தொடர்பான ஆராய்ச்சிக்கான மையத்தை ஐஐடி மெட்ராஸ் அரங்கில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
Hyundai invest in TN
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ. 6 180 கோடி முதலீட்டு செய்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த முதலீடு மூலம் மின்சார வாகன உற்பத்தி, சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பங்களிப்பை அதிகரிக்க 10 ஆண்டுகளில் 2023 முதல் 2032 வரை ஒவ்வொரு கட்டம் கட்டமாக திட்டமிடப்பட்ட முந்தைய ரூ.20 000 கோடி முதலீட்டிற்கு இது கூடுதலாகும்.
2024 தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆட்டோமொபைல் தொர்பான சந்தையில் ஹூண்டாய், வின்ஃபாஸ்ட் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதுதவிர, ஹூண்டாய் இந்தியா நெக்ஸோ ஃப்யூவல் செல் கார் (FCEV) மற்றும் ADAS தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை காட்சிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் ஜனவரி 16 ஆம் தேதி புதிய கிரெட்டா காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.