இந்தயாவின் சிசிஐ அமைப்பு ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் முறையற்ற விற்பனை சலுகை மற்றும் டீலர்களை கட்டுப்படுத்திய நடவடிக்கைகளுக்கு என 87 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த உத்தரவிட்டுள்ளது.
ஹூண்டாய் அபராதம்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா நிறுவனத்துக்கு காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள அறக்கையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் விலை சலுகை அளவை விட முறையற்ற வகையில் போட்டியாளர்களுக்கு எதிராக செயல்பட்டதற்கும். டீலர்கள் நிறுவனம் பரிந்துரைத்த லூபிரிகன்ட்ஸ் பயன்படுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு போன்ற செயல்களால் தற்போது ரூபாய் 87 கோடியை அபராதமாக விதித்துள்ளது.
முறையற்ற வகையில் போட்டியாளர்களுடன் குழபத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லை மீறும் நிறுவனங்களை சிசிஐ கண்கானிப்பதுடன், நாட்டிலுள்ள பெரும்பாலான முக்கிய துறைகளை சிசிஐ கண்கானித்து வருகின்றது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈட்டிய வருமானத்தில் 0.3 சதவிகிதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.