இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் புதிதாக ஹோண்டா ப்ரோ கேர் புரோகிராம் என்ற பிரத்தியேக சர்வீஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்பட மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை சிறப்பு கட்டணத்தில் பெறும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா ப்ரோ கேர் புரோகிராம்
இந்தியாவின் ஹோண்டா கார் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஹோண்டா ப்ரோ கேர் புரோகிராம் வாயிலாக ஹோண்டா கேர் பேக்கேஜ்,நீட்டிக்கப்பட்ட வாரண்டி , சாலையோர உதவி வசதி, மதிப்புகூட்டப்பட்ட சேவைகள் மற்றும் முறையான கால அட்டவனை பராமரிப்பு போன்றவற்றுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றது.
ஹோண்டா கேர் பராமரிப்பு விலை மற்றும் பேக்கேஜ் விபரங்கள்
2 வருடம் அல்லது 40,000 கிமீ வரை சலுகை பெற உள்ள மாடல்கள் பிரியோ,ஜாஸ், அமேஸ் மற்றும் சிட்டி போன்றவை ஆகும்.
- பிரியோ மற்றும் அமேஸ் பெட்ரோல் கார்களுக்கு ரூ.11,000
- சிட்டி மற்றும் ஜாஸ் பெட்ரோல் கார்களுக்கு ரூ. 13,000
- சிட்டி மற்றும் ஜாஸ் டீசல்மாடலுக்கு 21,000
- அமேஸ் டீசல் காருக்கு 18,000
ஹோண்டா WR-V மற்றும் BR-V கார்களின் விலை பேக் மூன்று வருடம் அல்லது முதல் 30,000 கிமீ வரை வழங்கப்படுகின்றது. இவற்றில் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு மட்டும் ரூபாய் 600 கூடுதலாக வசூலிக்கப்படும்.
- ஹோண்டா WR-V மற்றும் BR-V பெட்ரோல் மாடலுக்கு ரூ.9,500
- ஹோண்டா WR-V டீசல் மாடலுக்கு ரூ. 15,000
- ஹோண்டா BR-V டீசல் மாடலுக்கு ரூ. 15,000
நீட்டிக்கபட்ட வாரண்டி விபரம்
ஹோண்டா ப்ரியோ, அமீஸ் டீசல், ஜாஸ் பெட்ரோல், அமேஸ் பெட்ரோல், ஜாஸ் டீசல் போன்ற மாடல்களுக்கு 4 வருடம் அல்லது 80,000 கிமீ வரை பெற முறையே வரிசைப்படியே ரூ. 5800/-, ரூ. 7500/-, ரூ. 7000/-, ரூ. 7000/- மற்றும் ரூ. 8500 ஆகும்.
சிட்டி பெட்ரோல், சிட்டி டீசல், WR-V பெட்ரோல், BR-V பெட்ரோல், WR-V டீசல் மற்றும் BR-V டீசல் போன்ற மாடல்களுக்கு 5 வருடம் அல்லது வரம்பற்ற கிமீ வரை பெற முறையே வரிசைப்படியே ரூ. 12,000 / -, ரூ. 17,500 / -, ரூ. 11,500 / -, ரூ. 12,000 / -, ரூ. 15,000 / – மற்றும் ரூ. 15,000 / ஆகும்.
ஹோண்டா ரோடு சைடு அசிஸுடன்ட்
* 1 வருடம் – ரூ. 1800 / –
* 2 வது ஆண்டு – ரூ. 3000 / –
* 3 ஆம் வருடம் – ரூ. 3800 / –
* 4 வது வருடம் – ரூ. 4700 / –
* 5 வது ஆண்டு – ரூ. 6100 /
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ;-
- ஹோண்டாவின் பிளாட்டினம் சர்வீஸ் மையங்களில் 3 மணி நேரத்தில் சர்வீஸ் மற்றும் 4 மணிநேரத்தில் பாடி அன்ட் பெயின்ட் வேலைப்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்றது.
- ஹோண்டாவின் ப்ரீபெயிடு பராமரிப்பு திட்டத்தில் கீழ் பிரியோ,ஜாஸ், அமேஸ் மற்றும் சிட்டி வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வருட வாரண்டி அல்லது 20000 கிமீ வரை பயன்பெறலாம். ஹோண்டா WR-V மற்றும் BR-V வாடிக்கையளர்கள் 3 வருடம் அல்லது முதல் 30,000 கிமீ வரை விலை சலுகையை பெறலாம்.
- நீட்டிக்கப்பட்ட வாரண்டியை 7 வருடங்களும் , ரோடு சைட் அசிஸ்டன்ஸ் அதிகபட்சமாக 5 வருடமும் பெறலாம்.
இதுதவிர மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளாக அன்டி ரஸ்ட்,பெயின்ட் புரடெக்ஷன்,இன்டிரியர் கிளினிங் போன்றவற்றுக்கு சிறப்பு பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள டீலரை அனுகவும்.