ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பண்டிகை காலத்தில் ஒட்டுமொத்தமாக 4,47,849 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் 20 % வளர்ச்சி அடைந்துள்ளது.
“பண்டிகைக் காலத்தில் இந்நிறுவனம் அதன் விற்பனையில் உயர்வைக் கண்டது மற்றும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 20 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது” என்று ஹோண்டா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Honda Sales Report November 2023
நவம்பர் 2023ல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 20 சதவிகிதம் உயர்ந்து 4,47,849 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3,73,234 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
உள்நாட்டில் விற்பனை 4,20,677 ஆக ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 3,53,553 யூனிட்களாக இருந்தது. 2022 நவம்பரில் 19,681 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 27,172 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் கூட்டத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 30 எலக்ட்ரிக் மாடல்களை உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.