இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் பைக் தயாரிப்பாளர், 1 சதவீதம் வரை தனது அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐந்து மாடல்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விலை உயர்வுக்கு என எவ்விதமான காரணத்தையும் ஹீரோ பைக் நிறுவனம் குறிப்பிடவில்லை. மேலும் அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளின் காரணமாக விலை அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. கடந்த மே மாதம் ஹீரோ நிறுவனம் 5 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தது.
எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 டி ஆகியவற்றைச் சேர்த்தது, அதைத் தொடர்ந்து எக்ஸ்ட்ரீம் 200 எஸ் என்ற ஃபேரிங் ரக மாடலும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு புதிய ஸ்கூட்டர்கள் பிளஷர் பிளஸ் 110 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 போன்றவை ஆகும்.
இந்நிறுவனத்தின், சி.டி.ஓ மார்கஸ் பிரவுன்ஸ்பெர்கர் சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திலிருந்து விலகி ஜெர்மனிக்கு திரும்பினார். புதிதாக வளரும் எலெக்ட்ரிக் சந்தைக்கு என புதிதாக விக்ரம் காஸ்பேக்கர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.