இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மாறி வரும் உற்பத்தி செலவினங்கள், குறைந்து வரும் ரூபாயின் மதிப்பு, போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு ரூ. 500 எக்ஸ்-ஷோரூம் விலையில் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இரு சக்கர வாகன உற்பத்தில் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும் ஹீரோ நிறுவனம், இந்தியாவில் உற்பத்தி செய்து வரும் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையை எக்ஸ்-ஷோரூம் கட்டணத்தில் ரூ. 500 விலை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பாக அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் செலவு, தேய்ந்து வரும் நானயத்தின் மதிப்பு, போக்குவரத்து கட்டண உயர்வு போன்ற காரணங்களால் விலை உயர்வினை தவிரக்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளது.
விரைவில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், புதிய 200சிசி பைக் மாடலான எக்ஸ்ட்ரீம் 200 R மற்றும் 125சிசி ஸ்கூட்டர் மாடல்களாக டூயட், மேஸ்டரோ எட்ஜ் ஆகியவற்றை வெளியிட திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டின் விற்பனை நிறைவில் சுமார் 21 லட்சம் இருசக்கர வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.