நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் 2024-2025 ஆம் நிதியாண்டில் சுமார் 5,899,187 யூனிட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மார்ச் 2025 மாதந்திர விற்பனை எண்ணிக்கை 549,604 ஆக பதிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 2024 வரை தொடர்ந்து 24 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் விடா பிராண்டின் மூலம் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை 58,000 மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டில் உள்நாட்டு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் 5,611,758 வாகனங்களை விற்றுள்ளது. ஏற்றுமதி சந்தையில், 287,429 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
பைக் விற்பனையில் சீரான வளர்ச்சியை பெற்றிருந்தாலும் ஹீரோ ஸ்கூட்டர் விற்பனையில் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பீடுகையில் 8091 யூனிட்டுகள் குறைவாக விற்பனை செய்துள்ளது.
Particulars | MARCH’ 25 | MARCH’ 24 | FY’25 | FY’24 |
Motorcycles | 506,641 | 456,724 | 5,476,495 | 5,190,672 |
Scooters | 42,963 | 33,691 | 422,692 | 430,783 |
Total | 549,604 | 490,415 | 5,899,187 | 5,621,455 |
Domestic | 510,086 | 459,257 | 5,611,758 | 5,420,532 |
Exports | 39,518 | 31,158 | 287,429 | 200,923 |
மார்ச் 2025-ல், ஹீரோ மோட்டோகார்ப் 549,604 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்றது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 12% வளர்ச்சியாகும். இது உலகளாவிய வணிகத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர 39,518 யூனிட்டுகளாகவும், மார்ச் 2024 ஐ விட 27% வளர்ச்சியைப் பதிவுசெய்து பதிவு செய்தது. VIDA V2 விற்பனை 7,787 யூனிட்களாகும்.