நாட்டின் மிக்கபெரிய டூ வீலர் தயாரிப்பளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் சிங்கப்பூரின GIC முதலீட்டு நிறுவனம் என இரண்டும் 900 கோடி முதலீடு ஏதெர் எனர்ஜி நிறுவனத்தில் மேற்கொள்ள உள்ளது.
ஏற்கனவே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 33.1 % பங்ககுளை ஏதெர் நிறுவனத்தில் கொண்டுள்ள நிலையில் கூடுதலாக 550 கோடி முதலீட்டை செய்ய உள்ளது. சிங்கப்பூரின GIC முதலீட்டு நிறுவனம் ரூ.450 கோடி மேற்கொள்ள உள்ளது.
Ather Energy
ஓலா எலக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் ஏதெர் எனர்ஜி உள்ளது. மிக சிறப்பான ஸ்டார்ட் அப் நிறுவனமாக ஏதெர் தனது பயணத்தை 2018 ஆம் ஆண்டு 340 மற்றும் 450 என இரு ஸ்கூட்டர்களுடன் துவங்கியது.
CY2016-ல், இந்தியாவில் 16,301 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்த இந்நிறுவனம், CY2022-ல் மொத்த விற்பனை 6,15,365 யூனிட்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,675 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஏதெர் 73,036 எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது
ஏதெர் எனர்ஜி FY23 ஆம் நிதியாண்டில் வருவாய் 4.4 மடங்கு உயர்ந்து ரூ. 1,783 கோடி ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ. 408 கோடி மட்டும் பதிவு செய்திருந்தது.
சமீபத்தில் இந்நிறுவனம், 115 கிமீ ரேஞ்சு வழங்கும் மாடலை ரூ.1.30 லட்சத்தில் ஏதெர் 450s என்ற மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்திருந்தது.