ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் X440 பைக்கில் கூடுதல் வேரியண்டுகள் மற்றும் புதிய பைக்குகளை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக செபியில் தாக்கல் செய்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஹீரோ மற்றும் ஹார்லி ஏற்கனவே நைட்ஸ்டெர் 440 என்ற பெயரை ஏற்கனவே காப்புரிமை பெற்று வைத்துள்ள நிலையிலும், கூடுதலாக அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்கும் நோக்கில் வரவுள்ள புதிய மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வரவிருக்கும் புதிய மாடல்கள் இந்திய மட்டுமல்ல பல்வேறு வெளிநாடுகளுக்கு ஹீரோ மூலம் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
மேவ்ரிக் 440 மற்றும் எக்ஸ்440 என இரு மாடல்களும் ஒரளவு வரவேற்பினை பெற்று வரும் நிலையில், கூடுதலாக வரவுள்ள வேரியண்டுகள் மற்றும் புதிய மாடலிலும் தொடர்ந்து 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 440சிசி ஒற்றை சிலிண்டர் லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6000 rpm-ல் 27 bhp பவர் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்ற என்ஜினை கொண்டதாக நைட்ஸ்டெர் 440 வரக்கூடும்.
கூடுதலாக ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் 500-600சிசி பிரிவில் கூட ஒரு மோட்டார்சைக்கிளை வடிவமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.