ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பி.எஸ்.ஏ குழுமம் ஆகிய இரு நிறுவனங்களின் கீழ் செயல்படும் பிராண்டுகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமமாக உயர்வதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
இரு நிறுவனங்களும் பல மாதங்களாக இது குறித்து விவாதித்து வருவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நிறுவனங்களும் இப்போது இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
PSA குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” குரூப் பிஎஸ்ஏ மற்றும் எஃப்.சி.ஏ குழுமத்திற்கு இடையில் சாத்தியமான வணிக சேர்க்கை குறித்த சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து, உலகின் முன்னணி வாகன குழுமத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குரூப் பிஎஸ்ஏ உறுதிப்படுத்துகிறது.”
இதனை தொடர்ந்து எஃப்.சி.ஏ இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, “குரூப் பிஎஸ்ஏ மற்றும் எஃப்சிஏ குழுமத்திற்கு இடையில் சாத்தியமான வணிக நோக்கத்தை மேற்கொள்ள விவாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபியட், ஜீப், ஆல்ஃபா ரோமியோ, மசெராட்டி, ராம், லான்சியா மற்றும் கிரைஸ்லர் ஆகியவற்றை எஃப்.சி.ஏ கொண்டுள்ளது, அதே நேரத்தில் பி.எஸ்.ஏ குழுமத்தின் கீழ் பிஜோ, சிட்ரோயன், DS மற்றும் வோக்ஸ்ஹால்-ஓப்பெல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிங்க – பி.எஸ்.ஏ குழுமத்தின் சிட்ரோயன் எஸ்யூவி இந்தியா வருகை விபரம்