இந்தியாவின் எஸ்கார்ட்ஸ் டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் எலக்ட்ரிக் டிராக்டர் கான்செப்ட் மற்றும் ஹைட்ரோஸ்டேட்டிக் டிராக்டர் கான்செப்ட் என இருவிதமான மாடல்களை காட்சிப்படுத்தியுள்ள நிலையில் புதிதாக நியூ எஸ்கார்ட்ஸ் டிராக்டர் சீரிஸ் (நெட்ஸ்) என்ற பெயரில் டிராக்டர்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
எஸ்கார்ட்ஸ் எலக்ட்ரிக் டிராக்டர்
எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகனத்திற்கு தேவை அதிகரிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு சிறப்பான டார்க் மற்றும் பவரை கொண்டதாக வெளிப்படுத்தும் வகையில் பேட்டரி டிராக்டர் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி பணிகளை தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில ஆண்டுகளில் உற்பத்தி நிலை மின்சார டிராக்டர் சந்தைக்கு வரக்கூடும்.
எஸ்கார்ட்ஸ் ஹைட்ரோஸ்டேட்டிக் டிராக்டர்
கான்செப்ட் நிலையில் உள்ள இந்த டிராக்டர் சாதாரண கியர்பாக்ஸ் போல அல்லாமல் ஹெட்ரோஸ்டேட்டிக் முறையில் மிக சிறப்பாக கியர் மாற்றுவதற்கு எதுவான வகையில் உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எஸ்கார்ட்ஸ் நியூ எஸ்கார்ட்ஸ் டிராக்டர் சீரிஸ்
இந்தியா மற்றும் 43 சர்வதேச நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எஸ்கார்ட்ஸ் (New Escorts Tractor Series or NETS) 22-90hp வரையிலான பல்வேறு மாறுபட்ட ஹெச்பிகளில் ஃபார்ம்டெக் மற்றும் பவர்டெக் பிராண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.