Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஷெவர்லே கார் விற்பனை மட்டுமே நிறுத்தம், சர்வீஸ் தொடரும்

by MR.Durai
19 May 2017, 11:50 am
in Auto Industry
0
ShareTweetSend

வருகின்ற டிசம்பர் 31, 2017 முதல் இந்திய சந்தையில் கார் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஷெவர்லே நிறுவனம் சர்வீஸ், உதிரிபாகங்கள் மற்றும் வாரண்டி தொடர்பான சேவைகளை தொடர்ந்து வழங்கும் என அறிவித்துள்ளது.

ஷெவர்லே கார்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமான ஷெவர்லே இந்தியா பிரிவு கடந்த சில ஆண்டுகளாக மிக கடுமையான விற்பனை இழப்பை சந்திக்க தொடங்கியதை தொடர்ந்து சந்தையிலிருந்து செவர்லே பிராண்டை விலக்கி கொள்ள முடிவெடுத்துள்ளது. ஆனால் ஷெவர்லே நிறுவனத்தின் மகாராஷ்டிரத்தில் உள்ள தாலேகான் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் எந்த மாற்றமும் இல்லை , என அறிவித்துள்ளது.

செவர்லே பிராண்டு இந்தியாவை விட்டு வெளியேறுனாலும் தொடர்ந்து சர்வீஸ் தொடர்பான சேவைகளான கார் சர்வீஸ், உதிரிபாகங்கள் மற்றும் வாரண்டி தொடர்பான சேவைகளை தொடர்ந்து வழங்க உள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என ஜி.எம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவர்லே டீலர்களிடம் இருப்பிலுள்ள கார்களை விற்பனை செய்ய கூடுதலான சலுகைகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்தினாலும், சீனா நாட்டின் கூட்டணி நிறுவனமான எஸ்ஏஐசி-க்கு ஹாலோல் ஆலையை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதனால், செயிக் மோட்டார் கார்ப்பரேஷன் குழுமத்தின் அங்கமான எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டின் மத்தியில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Motor News

4 லட்சம் தள்ளுபடியில் செவர்லே கார்கள் வாங்கலாம்..!

இந்தியாவிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ..!

2017 செவர்லே பீட் ஜூலை மாதம் அறிமுகம்

இந்தியாவிலிருந்து ஜிஎம் செவர்லே வெளியேறுகின்றதா..?

செவர்லே டவேரா , செயில் மற்றும் என்ஜாய் நீக்கம்

2017 முதல் செவர்லே கார்கள் விலை உயர்கின்றது

Tags: Chevrolet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan