ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மற்றும் எஸ்யூவி ஆகியவற்றின் விலை அதிகபட்சமாக 2 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலையே உயர்வுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.
விலை அதிகரிப்பு ஆடி இந்தியாவில் விற்பனை செய்கின்ற அனைத்து மாடலுக்கும் பொருந்தும்.
Audi India
ஆடி இந்தியாவின் தலைவரான பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், “ஒரு நிலையான வணிக மாதிரியின் மூலம் லாபத்தை அடைவது ஆடி இந்தியாவின் முக்கியமான பகுதியாக உள்ளது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க நாங்கள் உறுதியேற்றுள்ளோம். அதிகரித்து வரும் சப்ளை செயின் தொடர்பான மூலம் பொருட்கள் மற்றும் தயாரிப்பு செலவுகள் காரணமாக, பிராண்டின் பிரீமியம் விலை நிலையைப் பராமரிக்கும் வகையில், எங்கள் மாடல் வரம்பில் விலையை உயர்த்தியுள்ளோம்.
எங்கள் டீலர் பார்ட்னர்களுக்கு நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், விலை உயர்வின் பெரிய தாக்கத்தை வழங்காமல் இருப்பதை உறுதி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 1, 2024 முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.
சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலை உயர்த்துவாக அறிவித்துள்ளது.