இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளராக விளங்கும் அசோக் லேலண்ட் நிறுவனம், 22 சதவீத வளர்ச்சியை கடந்த வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பீடுகையில் பெற்று மிக சிறப்பான வர்த்தகத்தை கொண்டதாக விளங்குகின்றது.
அசோக் லேலண்ட் விற்பனை நிலவரம்
இந்திய சந்தையில் வர்த்தக வாகன சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த மாதம் ஜனவரி முடிவில், 18,101 அலகுகளை மொத்தமாக விற்பனை செய்துள்ளது. இதனை முந்தைய வருடம் ஜனவரி மாதம் 14,872 அலகுகள் விற்பனை செய்திருந்தது.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன பிரிவில் முந்தைய வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பீடுகையில் 13 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஜனவரியில் 12,056 வாகனங்களும், 2018 ஜனவரி மாதத்தில் 13,643 அலகுகளும் விற்பனை செய்துள்ளது.
மேலும் இந்நிறுவனம் ஏப்ரல்-ஜனவரி 2018 வரையிலான 9 மாத விற்பனையில் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 20 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இலகுரக வாகன விற்பனையில் கடந்த காலண்டின் முடிவில் 4,458 வாகனங்களை விற்பனை செய்திருப்பதுடன், இதனை முந்தைய வருட காலண்டுடன் ஒப்பீடுகையில் 58 % வளர்ச்சியாகும்.