பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட வி15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்த 4 மாதங்களிலே 1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. வி15 (Bajaj V15) பைக் க்ரூஸர் மற்றும் கஃபே ரேஸர் பைக்குகளின் கலவையாகும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடலாக வெளிவந்துள்ள வி15 பைக்கில் 12 PS ஆற்றலை வழங்கும் 149.5சிசி DTS-i என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13 Nm ஆகும். சராசரியாக ஒரு லிட்டருக்கு 50கிமீ முதல் 55 கிமீ மைலேஜ் தரவல்லதாக V15 விளங்குகின்றது.
இந்தியா- பாகிஸ்தான் சந்தையில் முக்கிய பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானதாங்கி போர்கப்பலின் ஸ்கிராப் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள வி15 பெட்ரோல் டேங்கில் ஐஎன்எஸ் விக்ராந்த் பேட்ஜ் பதிகப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக மாதம் 25,000 வி15 பைக்குகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. இளம் தலைமுறையினருடன் நல்ல வரவேற்பினை பெற்று விளங்கும் வி15 பைக்கில் முன்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 130மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆரம்பரத்தில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்தில் வந்த பஜாஜ் V15 பைக் தற்பொழுது கூடுதலாக காட்டெயில் ரெட் வைன் வண்ணத்திலும் கிடைக்கின்றது. விற்பனை அதிகரித்து வருவதனால் தினமும் 1000 பைக்குகள் உற்பத்தி செய்ய பஜாஜ் திட்டமிட்டுளது. மேலும் அடுத்த 6 மாதங்களில் கூடுதலாக வி வரிசையில் பைக்குகள் சேர்க்கப்பட உள்ளது.
முழுமையாக பஜாஜ் வி15 பற்றி தெரிந்து கொள்ள
Bajaj V range Bike Photo Gallery
[envira-gallery id=”5741″]