வரும் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் ஹூண்டாய் நிறுவனத்தின் இயான் , ஐ10 , ஐ20 , கிரான்ட் ஐ10 , எலைட் ஐ20 , ஐ20 ஆக்டிவ் , எக்ஸ்சென்ட் , வெர்னா , எலன்ட்ரா , மற்றும் சான்டா ஃபீ என க்ரெட்டா தவிர்த்து அனைத்து மாடல்களும் விலை உயர்கின்றது.
இந்திய ஹூண்டாய் விற்பனை பிரிவு அதிகாரி ராக்கேஷ் கூறுகையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அதை ஈடுக்கட்ட வேண்டிய நிலையில் உள்ளதால் ரூ.30,000 வரை அனைத்து மாடல்களின் விலையும் உயர்கின்றது. மேலும் விலை உயர்வினை தவிர்க்க முடியாத காரணத்தால் உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு வரும் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.
Hyundai motors to hike all model prices upto Rs.30,000