ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையின் பங்களிப்பினை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீத பங்கினை கொண்டுள்ளது.
ஹீரோ அறிமுகம் செய்த மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றன. இதில் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. 110சிசி சந்தையில் முன்னனி வகிக்கும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ளது.
சில நகரங்களில் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டருக்கான காத்திருப்பு காலம் 45 நாட்கள் வரை உள்ளதாம். மேலும் ஹோண்டாவின் சந்தையை மதிப்பு சற்று சரிய தொடங்கியுள்ளது. சிபிஎஸ் பிரேக் ஆப்ஷனுடன் நவீன அம்சங்களுடன் இரண்டு விதமான வேரியண்டில் வந்துள்ளது.
மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டரில் 8.31பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8.30என்எம் ஆகும். மேலும் LX மற்றும் VX என இரு விதமான வேரியண்டில் உள்ளது.
தற்பொழுது 25 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் வரும் 2020ம் ஆண்டிற்க்குள் 50 நாடுகளாக விரிவுப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.