ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 6,39,802 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 11.25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் |
மேஸ்ட்ரோ மற்றும் பிளஸர் ஸ்கூட்டர்களின் வரிசையில் புதிதாக இணைந்த ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்களின் ஓட்டுமொத்த விற்பனை 1,08,000 ஸ்கூட்டர்களை எட்டியுள்ளது. ஸ்கூட்டர் சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 74.6 % வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதற்க்கு முன்பாக மாத விற்பனையில் 6 லட்ச இருசக்கர வாகனங்களை 4 முறை கடந்துள்ளது. ஹீரோ வரலாற்றில் முதன்முறையாக மாத விற்பனையில் அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
6 லட்சங்களை கடந்த புள்ளி விபரம்
அக்டோபர் 2013 – 6 ,25,420
மே 2014 – 6,02,481
செப்டம்பர் 2014 – 6,04,052
செப்டம்பர் 2015 – 6,06,744
அக்டோபர் 2015 – 6,39,802
Hero Motocorp October 2015 sales Report