கடந்த மே மாத இரு சக்கர வாகன விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தி பகிர்வில் தெரிந்துகொள்ளலாம். ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக முதலிடத்தினை பெற்று வருகின்றது.
முதல் 10 இடங்களை பிடித்துள்ள பட்டியலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 4 பைக் மாடல்கள் இடம்பிடித்துள்ளது.ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா மற்றும் சிபி ஷன் இடம்பிடித்துள்ளது.மேலும் டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் மொபட் மற்றும் ஜூபிடர் கூடுதலாக பஜாஜ் நிறுவனத்தின் சிடி பைக் மற்றும் பல்சர் வரிசை பைக்குகள் இடம்பெறுள்ளன.
கடந்த மாத விற்பனை நிலவரத்துடன் ஒப்பீடுகையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.அதனை தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் மொபட் நல்ல வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கி வருகின்றது. மேலும் ஹீரோ கிளாமர் மற்றும் ஜூபிடர் போன்றவை வளர்ச்சி அடைந்துள்ளது.
டாப் 10 பைக்குகள் மே 2016
மாடல் விபரம் | மே 2016 | |
1 | ஹோண்டா ஆக்டிவா | 2,37,317 |
2 | ஹீரோ ஸ்பிளெண்டர் | 2,07,010 |
3 | ஹீரோ HF டீலக்ஸ் | 1,12,273 |
4 | ஹீரோ பேஸன் | 97,882 |
5 | டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் | 75,406 |
6 | ஹீரோ கிளாமர் | 74,590 |
7 | ஹோண்டா சிபி ஷைன் | 56,818 |
8 | பஜாஜ் சிடி100 | 51,893 |
9 | பஜாஜ் பல்சர் | 46,307 |
10 | டிவிஎஸ் ஜூபிடர் | 43,867 |
பட்டியல் முழுமையாக கான; automobiletamilan.com
[irp posts=”7870″ name=”விற்பனையில் டாப் 10 கார்கள் – மே 2016″]