இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி கார்கள் கடந்த ஜனவரி 2016யில் 106,383 கார்களை விற்பனையில் செய்திருந்த நிலையில் ஜனவரி 2017ல் 133,768 கார்களை விற்பனை செய்து 25.9 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
மாருதி சுசூகி கார்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு ஆட்டோமொபைல் சந்தை வளர்ச்சியை தொடங்கியுள்ள நிலையில் மாருதியின் யூட்டிலிட்டி ரக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் விட்டாரா பிரெஸ்ஸா அமோக வரவேற்பினை பெற்று விளங்குவதனால் 101 சதவீத வளர்ச்சியை யூட்டிலிட்டி சந்தையில் பெற்றுள்ளது.
புதிய தலைமுறை டிசையர் கார் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் டிசையர் காரின் டாக்சி மாடலான டிசையர் டூர் விற்பனை ஜனவரி 2017யில் 15.3 சதவீத சரிவினை எதிர்கொண்டுள்ளது. அதாவது ஜனவரி 2016ல் 3545 டிசையர் டூர் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2017யில் 3001 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாருதியின் இலகுரக வர்த்தக வாகனமான மாருதி சூப்பர் கேரி 166 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி சந்தை 44.8 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.
மாருதி சுசூகி ஜனவரி 2017 விற்பனை பட்டியல்