இந்திய யமஹா மோட்டார்ஸ் பிரிவின் இரண்டாவது யமஹா ஆர்&டி மையம் சென்னை அருகே அமைந்துள்ள தொழிற்சாலையில் அமைக்க யமஹா திட்டமிட்டுள்ளது. யமஹா ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Yamaha Motor Research & Development India- YMRI) பிரிவின் வாயிலாக ரூ.1500 கோடி முதலீட்டில் ரூ.66 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா யமஹா மோட்டர்ஸ் நிறுவனத்தில் அமைய உள்ள புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.1500 கோடி முதலீட்டில் ரூ.66 கோடியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கு ஒதுக்கி முழுமையான மேக் இந்தியா திட்டத்தில் இணைத்துகொள்ள 2018 ஆம் வருடத்துக்குள் செயல்படுத்த உள்ளது.
புதிய ஆர்&டி மையத்தில் யமஹா ரேசிங் ஸ்போர்ட்ஸ் டிஎன்ஏ மட்டுமல்லாமல் இந்திய சந்தைக்கு ஏற்ற குறைந்த விலையில் சிறப்பான தரத்துடன் விளங்கும் மாடல்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. இந்திய யமஹாவின் முதல் ஆர்&டி மையம் சூரஜ்பூர் பகுதியில் அமைந்துள்ளது.
யமஹா மோட்டார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்திய பற்றி யமஹா கூறுகையில் அதிக செயல்திறன் கொண்ட மாடல்களை விட குறைவான செயல்திறனுடன் சிறப்பான மாடலாக குறைந்த விலையில் அமைந்திருக்கும் வகையிலான மாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த மையத்தில் ஆராய்ச்சி டிராக் , சோதனை மற்றும் இந்திய சாலைகளுக்கான சிமிலேஷன் போன்றவை உருவாக்கப்பட உள்ளது. யமஹா ஆர்&டி மையத்தின் முக்கிய நோக்கமாக இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையிலான மாடல்களை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய சந்தைக்கான முக்கிய ஆர்&டி மையமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட உள்ளது. யமஹா மோட்டார் குழுமத்தின் சர்வதேச ஆராய்ச்சி மையங்களில் 5வது மையமாக விளங்க உள்ளது. முந்தைய மையங்கள் இத்தாலி , சீனா , தாய்லாந்து மற்றும் தைவான் ஆகும்.
இந்தியாவில் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் விற்பனையில் மிகசிறப்பான வளர்ச்சியை சீராக பதிவு செய்து வரும் இந்திய யமஹா மோட்டார் ( India Yamaha Motor LTd. – IYM ) நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டில் 16 மில்லியன் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. யமஹா மோட்டாரின் பிரசத்தி பெற்ற மாடல்கள் யமஹா ரே , ரே இசட் , சிக்னஸ் இசட்-ஆர் , பேசினோ , சல்யூட்டோ ஆர்எக்ஸ் , சல்யூட்டோ , ஆர்3 , ஆர்15 மேலும் பல…