ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 6 மாதங்களில் 13,38,015 ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. இதே காலகட்டத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் 12,33,725 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
17 ஆண்டுகால முதலிடத்தை ஹீரோ ஸ்பிளென்டர் முதன்முறையாக இழந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் தொடர்ச்சியாக முதல் 10 இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து ஆக்டிவா முதலிடத்தை வகித்து வருகின்றது.
ஆக்டிவா vs ஸ்பிளென்டர் விற்பனை ஒப்பீடு பட்டியல்
2016 | January | February | March | April | May | June | Total |
Honda Activa | 2,10,123 | 2,10,028 | 2,19,926 | 2,33,935 | 2,37,217 | 2,26,686 | 13,38,015 |
Hero Splendor | 1,99,345 | 1,89,314 | 2,09,209 | 2,24,238 | 2,07,010 | 2,04,609 | 12,33,725 |
மொத்த இருசக்கர வாகன விற்பனையில் 15 சதவீத பங்கினை பெற்றுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர் சந்தையில் முன்னனி வகிக்க தரமான மோட்டார்சைக்கிளாக விளங்கி வருகின்றது. போட்டியாளரான ஹீரோ ஸ்பிளென்டர் சிறப்பான போட்டியாளராக விளங்கி வந்தாலும் கடந்த 6 மாதங்களாக தொடர்ச்சியாக பின்தங்கி வந்தாலும் விற்பனையில் சரிவினை சந்திக்கவில்லை. சுமார் 1,04,290 பைக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் உள்ள இரு மோட்டார்சைக்கிள்களும் இந்திய சந்தையின் தவிர்க்க முடியாத மாடல்களாகும்.
ஹெச்எம்எஸ்ஐ (HMSI) விற்பனை & மார்கெட்டிங் துனை தலைவர் YS குல்கிரியா இதுபற்றி கூறுகையில் இந்திய குடும்பங்களின் மிகசிறப்பான தேர்வாக விளங்கும் ஆக்டிவா ஸ்கூட்டர் மிகசிறப்பான மைலேஜ் , தரம் மற்றும் டெக்னாலாஜி போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.
போட்டியை ஈடுகொடுக்கும் வகையில் மிக சவாலான புதிய ஹீரோ ஸ்பிளென்ட் ஐஸ்மார்ட் 110 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டிவா வெற்றி தொடருமா ? இல்லை மீண்டும் ஹீரோ முதலிடத்தை பெறுமா ? உங்கள் கருத்துக்களை பதிவு செய்க…