கடந்த ஜூலை 2016 மாதந்திர விற்பனையில் முன்னனி வகிக்கும் டாப் 10 கார் மாடல்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆல்ட்டோ தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தாலும் விற்பனையில் சரிந்தே கானப்படுகின்றது.
க்விட் வரவால் ஆல்ட்டோ மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளதால் தொடர்ச்சியாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விற்பனையில் சரிவினை எதிர்கொண்டு வருகின்றது. டிசையர் ,ஸ்விஃப்ட் கார்கள் சீரான விற்பனையில் இருந்தாலும் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரும் முக்கிய பங்களிப்பாளராக ஆகியுள்ளது.
பயணிகள் கார் விற்பனையில் சியாஸ் , பலேனோ , கார்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 கார்களும் பட்டியலில் உள்ளது. அதனை தொடர்ந்து க்விட் 6வது இடத்தை பிடித்துள்ளது.
ஹூண்டாய் மற்றும் மாருதி சுசூகி இரு நிறுவனங்களே எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் தவிர்த்து சந்தையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களாகும். டாடா மோட்டார்சின் டியாகோ 5611 கார்கள் ஜூலை மாதத்தில் விற்பனை ஆகியுள்ளது.
விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூலை 2016
வ.எண் | கார் மாடல் விபரம் | ஜூலை -2016 |
1. | மாருதி சுஸூகி ஆல்ட்டோ | 19,844 |
2. | மாருதி சுஸூகி டிசையர் | 19,229 |
3. | மாருதி சுஸூகி வேகன்ஆர் | 15,207 |
4. | மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் | 13,934 |
5. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 11,961 |
6. | ரெனோ க்விட் | 9,897 |
7. | மாருதி சுஸூகி பலேனோ | 9,120 |
8. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 8,205 |
9. | மாருதி சுஸூகி செலிரியோ | 7,792 |
10. | மாருதி சுஸூகி சியாஸ் | 5,162 |