இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் தங்களின் ஜனவரி 2013 மாதத்தின் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன.இந்த பதிவில் மாருதி சுசுகி, ஹூன்டாய்,டோயோடா நிறுவனங்களின் விற்பனை விபரங்களை கானலாம்.
1. மாருதி சுசுகி விற்பனை
இந்தியாவின் முதன்மையான நிறுவனம் மாருதி சுசுகி ஜனவரி உள்நாட்டு விற்பனையில் 2% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 1.1 % குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 1,15,433 ஆகும். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 1,14,205 ஆகும்.
2.ஹூன்டாய் விற்பனை
ஹூன்டாய் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தினை விட 4.3 % மொத்த வளர்ச்சி அடைந்துள்ளது. ஹூன்டாய் ஜனவரி உள்நாட்டு விற்பனையில் 1.2% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 10.8 % குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 49,901 ஆகும். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 52,024 ஆகும்.
3.டோயோடா விற்பனை
டோயோடா நிறுவனம் உலகின் முதன்மையான நிறுவனமாகும். விற்பனை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தினை விட 23 % மொத்த வளர்ச்சியில் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 17,395 ஆகும். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 13,329 ஆகும்.