2017 ஆம் ஆண்டின் முதல் மாத விற்பனையில் டாப் 10 கார்களில் 8 இடங்களை கைபற்றியுள்ள மாருதி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக சுமார் 47 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 மாடல்களை தவிர மற்றவை அனைத்து மாருதி சுஸூகி நிறுவனங்களின் மாடல்களே ஆகும். குறிப்படம்படியாக மாருதி ஆம்னி பட்டியல் 10வது இடத்தை கைபற்றியுள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா கார் 9வது இடத்திலும் பலேனோ 8வது இடத்திலும் உள்ளது. இந்த மாத விற்பனை முடிவில் முதல் 10 இடங்களின் பட்டியில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் காரை எதிர்பார்க்கலாம்… காத்திருங்கள்…
இந்திய விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2017
வ.எண் | மாடல்கள் விபரம் | ஜனவரி 2017 |
1. | மாருதி சுஸூகி ஆல்டோ | 22,998 |
2. | மாருதி சுஸூகி டிசையர் | 18,088 |
3. | மாருதி சுஸூகி வேகன் ஆர் | 14,930 |
4. | மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் | 14,545 |
5. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 13,010 |
6. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 11,460 |
7. | மாருதி சுஸூகி செலிரியோ | 10,879 |
8. | மாருதி சுஸூகி பலேனோ | 10,476 |
9. | மாருதி சுஸூகி பிரெஸ்ஸா | 8,932 |
10. | மாருதி சுஸூகி ஆம்னி | 8,723 |