இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட ஹோண்டா க்ரூம் மினி பைக் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. MSX 125 அல்லது ஹோண்டா க்ரூம் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஹோண்டா க்ரூம் மினி பைக்
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஹோண்டா க்ரூம் அல்லது ஹோண்டா MSX 125 (Mini- Street Xtreme 125) என்ற பெயரில் மினி நேக்டு ஸ்டீரிட் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருவது படங்கள் வாயிலாக உறுதியாகியுள்ளது. ஹோண்டா குரோம் அடிப்படையிலே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நவி மாடல் வடிவமைக்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடதக்கதாகும்.
இந்த பைக்கில் 9.7 bhp பவர் மற்றும் 10.9 NM டார்க் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். பிரிமியம் பைக்குகளில் உள்ள வசதிகளை பெற்றுள்ள குரோம் மாடலில் முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க்குகள், 12 அங்குல டயர், ஏபிஎஸ், எல்இடி விளக்குகள் ஆகியவற்றுடன் முன் சக்கரத்தில் 220மிமீ மற்றும் பின் சக்கரத்தில் 190மிமீ என டிஸ்க் பிரேக் வசதியை கொண்டதாக உள்ளது.
இந்த வருடத்தில் இரண்டு புதிய மாடல்களை ஹோண்டா வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த மினி பைக் மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.
spy image source -gaadiwaadi