ராஜஸ்தான்,மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள குறைந்த விலை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா கிளிக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா கிளிக்
டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மற்றும் தொடக்க நிலை கம்யூட்டர் பைக்குகளுக்கு சவாலினை ஏற்படுத்ததும் வகையில் ஊரக பகுதி பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் ஸ்கூட்டர் தமிழகத்திலும் கிடைக்க தொடங்கியுள்ளது.
டிசைன்
ஊரக பகுதிகளில் பயணிக்கும் வகையில் மிக உறுதியான கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள க்ளிக் மாடலில் முக்கிய அம்சமாக இந்தியாவின் முதல் பிளாக் பேட்டர்ன் பெற்ற டயரை பொருத்தப்பட்டதாக அறிமுகம் ஆகியுள்ளது.
க்ளிக் ஸ்கூட்டர் கடுமையான மழை நேரங்களிலும், மோசமான சாலைகளில் பயணிக்கும் வகையிலான சிறப்பம்சத்தை பெற்றதாக பிளாக் பேட்டர்ன் டயர்கள் விளங்கும். 102கிலோ எடை பெற்றுள்ள இந்த மாடல் இருபாலருக்கும் பொதுவான தோற்ற அமைப்பை பெற்றிருப்பதுடன் மிக அகலமான இடைவெளி கொண்ட கால் வைக்கும் பகுதியில் மிக சிறப்பான இடத்தை பெற்றிருப்பதுடன்,இருக்கையின் அடியில் 14 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் உள்பட பின்புறத்தில் ஆப்ஷனலாக கேரியர் வைக்கப்பட்டுள்ளதால் பொருட்களை எடுத்துச் செல்ல எதுவான மாடலாக விளங்கும்.
எஞ்சின்
ஹோண்டா ஈக்கோ டெக்னாலஜி பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 bhp ஆற்றல் மற்றும் 8.94 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 109.19சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 83 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக கிளிக் ஸ்கூட்டர் விளங்குகின்றது.
சிறப்பு வசதிகள்
130 மிமீ டிரம் பிரேக்குடன் கூடிய ஈக்வலைஸர் வசதியுடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தை (combi brake system with equalizer) பெற்றிருப்பதுடன் எந்த சூழ்நிலை கொண்ட சாலையிலும் பயணிக்கும் வகையிலான பிலாக் பேட்டர்ன் பெற்ற டயர்களுடன், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன், மொபைல் சார்ஜிங் சாக்கெட், கூடுதல் சுமை ஏற்றும் வகையிலான கேரியர் வழங்க்கப்பட்டுள்ளது.
சிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் கிரே என நான்கு விதமான நிறங்களில் ஹோண்டா க்ளிக் கிடைக்க உள்ளது.
விலை
தொடக்கநிலை 100-110சிசி சந்தையில் உள்ள ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கு சவாலாக விளங்கும் வந்துள்ள ஹோண்டா இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் விலை ரூ. 44,524 எக்ஸ்-ஷோரூம் சென்னை விலை ஆகும்.