இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய 2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் i3S பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து கூடுதலாக ஹீரோ பேஸன் ப்ரோ மற்றும் பேஸன் எக்ஸ்ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது.
2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்
100-125சிசி வரையிலான சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் ஹீரோ அறிமுகம் செய்துள்ள மேம்படுத்தப்பட்ட புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் அறிமுகம் செய்யட்டுள்ளதை தொடர்ந்து விற்பனைக்கு ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்க உள்ளது.
விற்பனையில் உள்ள சூப்பர் ஸ்பிளென்டர் பைக்கை விட கூடுதலான மைலேஜ் மற்றும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சூப்பர் ஸ்பிளெண்டரில் தோற்ற பொலிவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சூப்பர் ஸ்பிளென்டர் பைக் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன், சைட் ஸ்டான்டு இன்டிகேட்டர் மற்றும் அகலமான பின்புற டயருடன் கூடுதலாக இருக்கையின் அடியில் ஸ்டோரேஜ் வசதி மற்றும் பெட்ரோல் டேங்க் அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வசதி பெற்றுள்ளது.
நவீன தலைமுறை பாடி கிராபிக்ஸ் , க்ரோம் பூச்சூ பெற்ற சைலன்சர், சில்வர் பூச்சூ கொண்ட ஸ்பிளென்டர் மாடலில் கருப்பு நிறுத்துடன் பாடி கிராபிக்ஸ், கருப்பு நிறத்துடன் சிவப்பு நிற பாடி கிராபிக்ஸ், கருப்பு நிறத்துடன் சில்வர் கிராபிக்ஸ், சிவப்பு மற்றும் கிரே நிறுத்துடன் கூடிய கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் மொத்தம் 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.
i3S நுட்பத்தை பெற்ற 125 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.2 bhp பவரையும், 11Nm டார்க் திறனையும் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இது முந்தைய மாடலைவிட எஞ்சின் 27 சதவீதம் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் திறனையும், 6 சதவீதம் கூடுதல் டார்க் திறனையும் வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.
2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் மணிக்கு 94 கிமீ வேகம் பயணிக்கும் திறன் கொண்டதாக வெளியாகியுள்ளது.
வருகின்ற ஜனவரி 2018 முதல் வாரத்தில் 2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த பைக்கின் விலை விபரம் அடுத்த வாரம் இறுதியில் வெளியாக உள்ளது.