மேம்படுத்தப்பட்ட புதிய 2017 சுஸூகி ஜிக்ஸெர் , சுஸூகி ஜிக்ஸெர் SF பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஜிக்சர் பைக்கில் பிஎஸ் 4 எஞ்சின் மற்றும் ஏஹெச்ஓ வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
2017 சுஸூகி ஜிக்ஸெர்
வருகின்ற ஏப்ரல் 1 முதல் அனைத்து பைக்குகளிலும் பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட வேண்டியா கட்டாயம் ஏற்ப்படுள்ளதால் அனைத்து வாகன தயாரிபாளர்களும் பிஎஸ் 4 சார்ந்த மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. ஜிக்சர் அணிவரிசை மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டரிலும் புதிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.
2017 மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ் , ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதி , கிளியர் லென்ஸ் கொண்ட டெயில் விளக்கு போன்றவை பெற்றுள்ளது. எஃப்ஐ எஞ்சின் மாடலிலும் பிஎஸ் 4 வகை மாசு கட்டுப்பாடு எஞ்சினை பெற்றுள்ளது.
14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்த 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.
ஒற்றை வண்ணம் , இரட்டை வண்ண கலவை என இருவிதமான வண்ணத்தில் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது.
2017 சுஸூகி ஜிக்ஸெர் பைக் விலை
- டிரம் பிரேக் – ரூ. 89,645
- ரியர் டிஸ்க் பிரேக் – ரூ.93,422
2017 சுஸூகி ஜிக்ஸெர் SF பைக் விலை
- ஜிக்ஸெர் SF பைக் விலை ரூ.1,03,443
( அனைத்தும் சென்னை ஆன்-ரோடு விலை பட்டியல் )