மெர்சிடிஸ-பென்ஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ் AMG ரக பெர்ஃபாமென்ஸ் பிரிவின் கீழ் புதிய மெர்சிடிஸ் AMG GT-R ஸ்போர்ட்ஸ் கார்  உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளத்து. பட்டைய கிளப்பும் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக வந்துள்ள AMG GT-R காரின் டேக்லைன் Beast of the Green Hell ஆகும்.

mercedes-AMG-GT-R-debuts

குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு திருவிழாவின் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஎம்ஜி ஜிடி-ஆர் கார் விற்பனையில் உள்ள ஜிடி எஸ் மாடலை விட 90 கிலோ எடைகுறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.0 லிட்டர்  V8 பைடர்போ என்ஜின் 577 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் இழுவைதிறன் 700 Nm ஆகும். 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ்  பொருத்தப்பட்டுள்ளது.

AMG GT-R ஸ்டீரிட் லீகல் ஸ்போர்ட்ஸ் கார் உச்ச வேகம் மணிக்கு 318 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். விற்பனையில் உள்ள ஜிடி எஸ் காரை விட 8 கிமீ வேகம் கூடுதலாகுவும் , 0 முதல் 100 கிமீ வேகத்தினை 0.2 விநாடிகள் குறைவான நேரத்திலும் எட்டும்.

ஏஎம்ஜி ஜிடி-ஆர் குறித்து மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நர்வாக இயக்குநர் திரு. டோபியாஸ் மோயர்ஸ் கூறுகையில் புதிய ஏஎம்ஜி ஜிடி-ஆர் வாயிலாக அடுத்தகட்ட செயல்திறன் மிக்க கார்களக்கு முன்னேறியுள்ளோம். மிக சிறப்பான ரோடு ரேசிங் அனுபவத்தினை வழங்கும் வகையிலான மிகச்சிறப்பான மோட்டார் ரேசிங் பெர்ஃபாமென்ஸ் காராக விளங்கும் என தெரிவித்துள்ளார்.

AMG-GT-R-debut

மிகச்சிறப்பான ஸ்டைலிங் தாத்பரியங்களை கொண்ட மாடலாக வெளியாகியுள்ள AMG GT-R மாடலில் சிறப்பான முன்பக்க கிரில் அமைப்பு , பக்கவாட்டில் அமைந்துள்ள 10 ஸ்போக் கொண்ட 20 இன்ச் ஃபோர்ஜ்டு அலாய் வீல் , பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு , டபுள் ரியர் டிஃப்யூசர் என பலவற்றை பெற்றுள்ளது.

இன்டிரியரில் நாப்பா லெதர் அப்ஹோஸ்ட்ரி , ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் பக்கல் இருக்கை , ஏஎம்ஜி நைட் டிரைவிங் பேக்கேஜ் போன்றவற்றை கொண்டுள்ளது. ஏஎம்ஜி டிரைவ் செலக்ட் , ஸ்போர்ட் ப்ளஸ் மற்றும் ரேஸ் என இரு விதமான ஓட்டுதல் மோட் என பல சிறப்பம்சங்களை கொண்ட காராக மெர்சிடிஸ் AMG GT-R  விளங்குகின்றது.

மெர்சிடிஸ் AMG GT-R  வருகின்ற நவம்பர் 21 ,2016யில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் மெர்சிடிஸ் AMG GT-R  2017 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

Mercedes-AMG GT-R Photo’s Gallery

[envira-gallery id=”8245″]