இந்திய மோட்டார் சந்தையில் இந்த ஜனவரி-யில் வேகன்-ஆர், ஹேரியர், பென்ஸ் வி-கிளாஸ் அறிமுக வரிசையில் புதிதாக நிசான் கிக்ஸ் எஸ்யூவி மாடல் ஜனவரி 22-ல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக நிசான் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

Nissan Kicks SUV

மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக விளங்க உள்ள நிசான் கிக்ஸ் எஸ்யூவி  ஆகும். ரெனோ கேப்டூர் , டஸ்ட்டர், நிசான் டெரானோ உள்ளிட்ட மாடல்கள் தயாரிக்கப்பட்ட சர்வதேச B0  பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும்.

இந்த எஸ்யூவி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் தேர்வுகளில் கிக்ஸ் கிடைக்க உள்ளது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 BHP பவர், 142 NM டார்க் மற்றும் 5 வேக மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. கிக்ஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 BHP பவர், 240 NM டார்க் 6 வேக மேனுவல் மற்றும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் வழங்கப்படலாம். குறிப்பாக, ஆட்டோமேட்டிக் மாடல்கள் வருகை குறித்து அதிகார்வப்பூர்வமாக தகவல் உறுதி செய்யப்படவில்லை.

5 இருக்கை கொண்ட கிக்ஸ் மாடலில் இந்தியாவில் முதன்முறையாக க்ராஸ்ஓவர் எஸ்யூவி ரக பிரிவில் இடம்பெற உள்ள அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படுகிற 360-டிகிரி கோணத்திலான 4 கேமராக்கள் காரை சுற்றி அமைக்கப்பட்டு அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த காரில் 8 இன்ஃ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியுடன், 17 அங்குல அலாய் வீல், எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் இடம்பெற உள்ளது.

இந்த மாடல் ரெனோ கேப்டூர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது. கடந்த சில வாரங்களாக ரூ.25,000 செலுத்தி கிக்ஸ் காருக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. நிசான் கிக்ஸ் விலை ரூ. 9 லட்சம் தொடங்கி ரூ. 15 லட்சம் வரை அமைந்திருக்கலாம்.