சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா , ஃபோக்ஸ்வேகன் குழுமம் மற்றும் ஸ்கோடா இணைந்து புதிய வாகனங்களை தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

டாடா , ஃபோக்ஸ்வேகன்

இந்த ஒப்பந்தம் மூன்று நிறுவனங்களுக்கு இடையில் உள்ள பலவேறு விதமான துட்பங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக ஸ்கோடா செயல்பட்டாலும் இந்த கூட்டணியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை காட்டிலும் ஸ்கோடாவே மிகுந்த முக்கியம் பெறுகின்றது.

டாடா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய டாமோ துனை பிராண்டில் உருவாக்கப்பட்டுள்ள அட்வான்ஸ்டு மாடுலர் பிளாட்பாரத்தின் (advanced modular platform -AMP) நுட்பங்களை இரு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது. டாடா நிறுவனத்தின் 6 பிளாட்ஃபாரங்களில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் ஒன்றுதான் ஏஎம்பி ஆகும்.

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் குழுமங்கள் தங்களுடைய என்ஜின் சார்ந்த நுட்பங்கள் மற்றும் நவீன நுட்பங்களை பகிர்ந்து கொள்ள உள்ளன. மேலும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஸ்கோடா இந்த ஒப்பந்தம் மூலம் பட்ஜெட் விலையில் கார்களை களமிறக்க வாய்ப்புள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகின்ற முதல் கார்மாடலை 2019 ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.